தீராக்
கூடலின்னிடையில்
திடுக்கிட்டுக்
கேட்டான்
ஆணலை ...
" உன்னுதட்டின்
உப்பெங்கே " ?
லயித்தபடி
கிடந்தப்
பெண்ணலை-
சலித்தபடி
சபித்தாள் ...
"சேமிக்கத்
தெரியாத
சோமாரிகள்
நாட்டின்
மழைநீர் "
என்னிதழை
ஓயாமல்
நனைக்கையில்
என் செய்வேன்
கடலா ?
- தாகம் செங்குட்டுவன்
( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? தொகுப்பிலிருந்து )
No comments:
Post a Comment