Wednesday, December 5, 2018

தாகம் செங்குட்டுவன்

மருந்தில்லா
உணவுக்குப் போராடியவரின்
நோய்த் தீர்க்க
மருந்தில்லை

மக்கள் மீது
பற்றுநோய் கொண்டவர்களுக்கு
புற்றுநோயே
பரிசு

யாரங்கே ...
வாய்க்கரிசி இடாதீர்கள்
பாரம்பரிய விதை நெல்லை
தூவுங்கள் !!

"பிரெஞ்சு கயானாவிலிருந்தும்
ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்தும்
பாயும் விண்கலங்கள்
இனி விவசாயத்தை மேம்படுத்தும்"

ஜி 20 உச்சி மாநாட்டில்
நம்மவர்
முழக்கம்
கேட்கிறதா ?

நெல் ராமா
போய் வா....
இது 'வில் ராமர்'
நாடு  !!

2.0 வில்
பறவை மனிதனை
பத்தாடிய
எம் தலைவன்

3.0 வில்
நெல் மனிதனை
பந்தாட
வருவான் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ....தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...