கிழக்குக் கடற்கரைச் சாலை
சில தகவல்கள்
அடையாறு மத்திய கைலாஷ் முனையில் தொடங்கி,
படூர் வரையில், இடைப்பட்ட பகுதிகளில் 3 இலட்சம் வீடுகள் உள்ளன.
12.5 இலட்சம் மக்கள் வசிக்கின்றார்கள்.
ஒரு நாளைக்கு 1.20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.
அவற்றுள் 50 விழுக்காட்டினை,
கணினி நிறுவனங்களும் உணவகங்கள் உள்ளிட்ட இதர வணிக நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.
அவர்கள் லாரிகளில்தான் தண்ணீரைக் கொண்டு வருகின்றார்கள்.
எனவே, ஆயிரக்கணக்கான குடிநீர் லாரிகள்
இந்தப் பகுதிகளில் ஓடுகின்றன.
இந்த நீரில் 70 விழுக்காடு கழிவு நீராக வெளியேறுகின்றது.
இந்த வழியில் 600 கணினி நிறுவனங்கள் உள்ளன.
3.2 இலட்சம் பேர் பணிபுரிகின்றார்கள்.
இந்தப் பகுதிக்கு மட்டும் நீர் மேலாண்மைக்காகத் தமிழக அரசு ஆண்டுக்கு 1000 கோடி செலவிடுகின்றது.
(குடிநீர் வழங்க, கழிவு நீர் அகற்ற)
புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குக் குழாய் இணைப்பு கொடுப்பதில் பெரும் சிக்கல் நிலவுகின்றது.
முன்பு கிராமங்களாக இருந்த பகுதிகளுக்கு மட்டும்தான் பெரும்பகுதி நீர் போகின்றது.
இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புத் தண்ணீர்தான்.
பெருங்குடியில் மட்டும் 50 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கின்றது.
சோழிங்கநல்லூரில் உப்புத் தண்ணீரும் 100 அடி ஆழத்தில்தான் கிடைக்கின்து.
அருகில் கடல் இருந்தும் கூட.
கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் வரை
நிலத்தடி நீர் முழுமையும் உப்புத் தண்ணீர்தான்.
No comments:
Post a Comment