எதுகையும் மோனையும்
எதிரெதிர் திசை என்றானது
இங்கே இலக்கியம் இதயம்
இலக்கணம் இரு விழிகள்
ரகசிய யுத்தங்கள் நோக்கு வர்மத்தில் பல ஆண்டுகள் நிகழ்வதால்
வெட்டவெளி முத்த நாடகங்கள் இங்கு அவசியமற்றுப் போகின்றன
சந்திப்புகள் நொடி இழையில் நேர்வதால்
சந்திப்பிழைக்கே வாய்ப்பில்லை
திணிக்க வழியில்லை என்பதால்
போராட்டமும் இல்லை தியாகிகளும் இல்லை
வரிவடிவமே இன்றி
தொன்றுத் தொட்டு வாழ்கிறது ...
பாரெங்கும் வேர்பரப்பி தழைக்கும்
பார்வை மொழி !
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து....)
No comments:
Post a Comment