Thursday, November 29, 2018

தாகம் செங்குட்டுவன்

இடதுக்கால்களின்
காலணிகள்
மிக அதிகம்

வலதுக்கால்களின்
காலணிகள்
மிகக்குறைவு

கணக்குப்பார்த்தப்பின்பே
புரிந்துக்கொண்டான்
காலணித் தொழிற்சாலையின்
அதிபர்

தன் தொழிலாளர்கள்
ஏதோ ஓர்
கோரிக்கைக்காக
போராடுகிறார்கள்
என்பதை !

வெள்ளை தேவதைகளே...
உங்கள்
போராட்டத்தை
உடனே
நிறுத்திவிட்டு
பணிக்குத்திரும்பச்சொன்ன
நீதிபதியிடம்
கேளுங்கள்....

எந்தக்கைகளில்
அதிக
ஊசிகளைப்போடுவது
என்று
இடதா ?
வலதா ?

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...