Tuesday, July 31, 2018

ஜோதி மணிவண்ணன்

ஜூலை..31

தமிழ்த்தேசிய சிந்தனையாளர்
இயக்குநர் மணிவண்ணன்
பிறந்த நாளில்...அவரது மகள் ஜோதி
அமெரிக்காவிலிருந்து பகிரும் செய்தி
வாட்ஸப்பில் வந்தது..

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், நானூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், தமிழ் சினிமாவின் சுவாரஸ்ய படைப்பாளி... மணிவண்ணன். காமெடி, குணச்சித்திரம், வில்லன் எனப் பன்முக கதாபாத்திரங்களிலும் அசத்திய மணிவண்ணன் பிறந்த தினம் இன்று (31.07.18). அமெரிக்காவில் வசிக்கும் மகள் ஜோதி, தந்தையின் நினைவுகளைப் பகிர்கிறார்.

``அப்பா இயக்கின ரெண்டாவது படம், `ஜோதி'. அந்தப் படம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், எனக்கும் ஜோதின்னு பெயர் வெச்சுட்டாரு. இயக்குநரா, நடிகரா 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியா இருந்தார். அவர் வீட்டுல இருக்கும் நேரம் குறைவு. `எங்களோடு அதிக நேரத்தைச் செலவழிங்கப்பா'னு நானும் தம்பி ரகுவண்ணனும் அடிக்கடி கேட்போம். `நான் நிறைய உழைச்சாதானே நீங்க கேட்கிறதை வாங்கித்தர முடியும்'னு சொல்வார். வேலை முடிஞ்சு மிட் நைட்ல வீட்டுக்கு டயர்டா வருவார். அப்பவும், `சாப்பிட்டீங்களா கண்ணுங்களா? இன்னைக்கு உங்களோடு சேர்ந்து அப்பாவால் சாப்பிட முடியலை'னு கொஞ்சுவார்.

என் ஸ்கூல் லைஃப்ல, அப்பா என் ஸ்கூலுக்கு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஃபேர்வல் பார்ட்டிக்கு மட்டும்தான் வந்தார். ஆனால், எங்களை சம்மர் வெக்கேஷன் கூட்டிட்டுப்போவார். அப்பாதான் கார் ஓட்டிட்டு வருவார். ஆனால், இடம் வந்ததும் தன்னைப் பார்க்க கூட்டம் கூடிடும்னு எங்களை இறக்கிவிட்டுட்டு, அவர் காரிலேயே வெயிட் பண்ணுவார். அப்போ, அவுட்டோர் ஷூட்டிங் அதிகம் நடக்கும் பொள்ளாச்சிக்கு எங்களை அடிக்கடி கூட்டிட்டுப்போவார்'' என நினைவலைகளைத் தொடர்கிறார் ஜோதி.

``அப்பா எனச் சொன்னதும் புத்தகங்கள்தாம் முதல்ல நினைவுக்கு வரும். அவர் நேரத்தை வேஸ்ட் பண்ணவே மாட்டார். வீட்டுல பெரும்பாலும் புத்தகங்கள் படிச்சுட்டிருப்பார். நிறைய புத்தகங்களை வாங்கிக் குவிச்சார். அவுட்டோர் ஷூட்டிங் போகும்போது, டிரஸ்ஸைவிட புத்தகங்களைத்தாம் அதிகம் எடுத்துட்டுப் போவார். தன் உயிர் பிரியும் நாளிலும் புத்தகம் வாசிச்சுட்டிருந்தார். பெரியார், தமிழீழம், அடக்குமுறைக்கு எதிரான கருத்துகள், மனித உரிமைகள் சார்ந்த புத்தகங்களைத்தான் அதிகம் படிச்சார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா இருப்பார். சமூகச் செயல்பாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார். ஒரு தமிழரா அவரின் செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை ஷூட்டிங்ல கால்ல அடிபட்டு ரொம்ப நாள் அவதிப்பட்டார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு சர்ஜரி முடிஞ்சு, நடிக்கிறதைக் குறைச்சுகிட்டார். அப்போது எங்களோடு அதிகமா நேரத்தைச் செலவிட்டார்.

அப்பா ஒரு சினிமா பிரபலம் என்றோ, எங்களுக்குத் தேவையானதை நிறைவா செய்தவர் என்றோ புகழ மாட்டேன். அவர் மிகச்சிறந்த மனிதநேயர். வீட்டிலு சரி, வெளியிலும் சரி, பிரபலம் என்கிற அடையாளத்துடன் நடந்துக்கிட்டதே இல்லை. சக மனிதர்களை மதிக்க தெரிஞ்சவர். `யாரா இருந்தாலும் சுயமரியாதையோடு வாழணும்'னு சொல்வார். `தப்பு பண்ணக் கூடாது. எதற்கும் பயப்படக் கூடாது, ஒருத்தர் செய்த தவறை மன்னிச்சுடணும்; மனசுல வெச்சு பழிவாங்கக் கூடாது' எனப் பல விஷயங்களை அவர்கிட்ட கத்துகிட்டேன்" என்கிறார் பரவசத்துடன்.

``அவர் உடல்நலத்தில் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையா?' எனக் கேட்டால், சில நொடி அமைதிக்குப் பிறகு தொடர்கிறார் ஜோதி.

மணிவண்ணன்

``இயக்குநரா வொர்க் பண்ணி, நிறைய ஸ்ட்ரெஸ், உடல்நிலை பாதிக்கப்பட்டார். `உள்ளத்தை அள்ளித்தா' போன்ற சில படங்களில் நடிக்க ஆரம்பிச்சார். அது பெரிய வரவேற்பைப் பெறவே, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். தன் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் உழைச்சார். குடிக்கிற மாதிரியான கேரக்டரில் அதிகம் நடிச்சதால், நிஜத்துலயும் அப்படியானவர்னு பலரும் நினைக்கிறாங்க. அது உண்மையில்லை. ஆனால், ஸ்மோக் பண்ணுவார். அதைத் தவிர்க்கச் சொன்னோம். ஒருகட்டத்துல அவர் உடல்நிலை அதிகம் பாதிச்சது. அப்போ, அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போச்சு. அதை நினைச்சு வருத்தப்பட்டே அப்பாவும் தன் உடல்நலத்தைச் சரியா பார்த்துக்கலை. 2013-ல் எதிர்பாராதவிதமா அப்பா இறந்துட்டார். அடுத்த ரெண்டு மாசத்திலேயே அம்மாவும் இறந்துட்டாங்க. நானும் தம்பியும் அதிலிருந்து மீளவே ரொம்ப நாளாச்சு. நான் அமெரிக்காவுக்கு நிரந்தரமா ஷிஃப்ட் ஆனேன்; தம்பி கோயம்புத்தூருக்கு ஷிஃப்ட் ஆகிட்டான்'' என்கிறார்.

மணிவண்ணன்

``அவர் எங்களுக்குப் பல நல்லது கெட்டதுகளை சொன்னபோதும், ஒருபோதும் வலுக்கட்டாயமா திணிச்சதில்லை. `படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை. எந்த விஷயம் பண்ணினாலும் நேசிச்சுப் பண்ணுங்க. அப்போதான் அந்தத் துறையில ரொம்ப நாள் டிராவல் பண்ணலாம்'னு சொல்வார். என் ஆசைப்படி, எம்.பி.ஏ முடிச்சேன். அப்பா, கடவுள் மறுப்பாளர். அவருக்கு அப்படியே எதிரான அம்மாவின் ஆசைக்காக, வீட்டுல பெரிய பூஜை அறை கட்டிக்கொடுத்தார். கலப்புத் திருமணத்துக்கு ஆதரவானவர். என் காதல் கல்யாணத்தைச் சிறப்பா நடத்திவெச்சார். கோயம்புத்தூர் குசும்பு அப்பாவுக்கு அதிகம் உண்டு. இயல்பாவே ஹியூமர் சென்ஸ் உள்ளவர். வீட்டுல நாங்க ஒண்ணா இருக்கும்போது, டிவியில் தமிழ்ப் படங்களை அதிகம் பார்ப்போம். அப்போ, அந்தக் காட்சிகள் பற்றியும் அதில் நடிச்ச நடிகர்கள் பற்றியும் நிறையச் சொல்வார் .

ஒருமுறை, எம் அப்பா டைரக்ட் பண்ணின படம்னு தெரியாமல், ஒரு படத்தைப் பற்றி என் கணவர் கலாய்ச்சுட்டார். `இது நான் டைரக்ட் பண்ணின படம் மாப்பிள்ளை'னு அப்பா சொன்னதும், `ஒரு லாஜிக் மிஸ்ஸாகுதே மாமா'னு என் கணவர் சமாளிக்க, `அப்போ எனக்கு அவ்ளோ அறிவு இல்லாம போச்சு'னு சொன்னார். அப்பா இயக்கி நடிச்ச `அமைதிப்படை' என் ஆல்டைம் ஃபேவரிட். அப்பாவுக்கும் சத்யராஜ் மாமாவுக்குமான நட்பு பலருக்கும் தெரியும். அவர் பையன் சிபியும் நானும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். அப்பா மறைவுக்குப் பிறகும், அவர் குடும்பம் எங்க மேலே அக்கறையுடன் இருக்காங்க. இந்தியா வரும்போதெல்லாம் அவர் வீட்டுக்குத் தவறாமல் போவேன். என் கல்யாண வாழ்க்கை நல்லா போகுது. இருவரும் அமெரிக்காவில் ஐடி வேலை செய்யறோம். அப்பா கற்றுக்கொடுத்த பல்வேறு விஷயங்கள் வெளிச்சமா இருந்து என் மற்றும் தம்பி குடும்பத்தை வழிநடத்திட்டு இருக்கு'' என நெகிழ்கிறார் ஜோதி.

*🐥ஊர்க்குருவி*

தாகம் செங்குட்டுவன்

கல்லூரியிலிருந்து
உன் வீட்டுத்தெருவில்
உன்னை
இறக்கிவிடும்போது

மறக்காமல்
என் கைகலில்
உன்
கையெழுத்திடுவாய்

போதாக்குறைக்கு
என் கன்னத்தில்
பேனாவால்
கோடிட்டுச்செல்வாய்

பார்ப்பவர்களுக்கு
எப்படி
புரியும்
நம் ஒப்பந்தம்?

இருசக்கர வாகனத்தில்
என் மீது
நீ சரியும்
தருணங்களில்

நான்
இவ்வுலகில்
இருப்பதில்லை
பறப்பேன்

என் கைகளில்
நீயிட்டக்
கையெழுத்துக்கொண்டே
சிலிர்ப்பேன் !

$ இன்றைய மழைப்பொழுதில் நனைந்த பழைய நினைவு

-தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ?" ...தொகுப்பிலிருந்து )

Monday, July 30, 2018

https://m.facebook.com/story.php?story_fbid=1079761772177712&id=472374359583126

Thirumavelan padikaramu

இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.
தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.
340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.
கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.
டைட்டல் பார்க்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்க துணைமின்நிலையம் அமைத்தார்.
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மென்பொருள் நிதி உருவாக்கி மென்பொருள் முனைவோருக்கு முதலீட்டு நிதி கொடுத்தார்.
சிறுசேரியில் வன்பொருள்/ மென்பொருள் பூங்கா அமைத்தார்.
தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐடி ஹைவே ஆக்கினார்.
வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார்.
பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார்.
தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.
யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.
உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.
அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையம் உருவாக்கினார்.
கல்லூரிகளிலும் கணினி பயிற்சி தொடங்கினார்.
தமிழ் இணைய ஆய்வு மையம் அமைப்பு.
டானிடெக் அமைத்தார்.
1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது. 96 - 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது.
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.
ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் இவர்.
ராணிப்பேட்டை/ ஓசூர் /ஶ்ரீபெரும்புதூர்/ இருங்காட்டுக்கோட்டை/ கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகம் அமைத்தார்.
ஹூண்டாய் வந்தது.
மிட்சுபிசி வந்தது.
ஃபோர்டு வந்தது.
சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது.
இந்தக் கருணாநிதிக்கு இதெல்லாம் தேவையா? யாராவது அவரிடம் கேட்டார்களா? அனுபவிப்பவர்களாவது நன்றி சொல்கிறார்களா?
இவை எல்லாமே 18 ஆண்டுகளுக்கு முன்னால்...!

Sunday, July 29, 2018

தாகம் செங்குட்டுவன்

உனக்காக
நான் அச்சிட்ட
நூலை
உன்னிடம் தந்தபோது
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்டாய் ....

கவிஞர் கனிமொழி
என்னை
உன்னிடம்
அறிமுகப்படுத்தியபோது
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்டாய் .....

தாகம் இதழுக்கு
நேர்காணல்
கேட்டபோதெல்லாம்
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்பாய் ....

" நீ
இப்போ
நல்லாயிருக்கியா
தலைவா  ? "

- தாகம் செங்குட்டுவன்

கலைஞர்

வாழ்க்கைத்தேர்தல்
வாக்கு
எண்ணிக்கையிலும்

முன்னிலை
வகிக்கிறார்
கலைஞர்  !!

- தாகம் செங்குட்டுவன்

Friday, July 27, 2018

தோழர் தியாகு

கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்!

நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திமுக தலைவராகக் கலைஞர் 50 ஆண்டு பணியாற்றியது குறித்த விவாதத்தில் கலைஞர் மீதும், திமுக மீதும் தோழர் தியாகு தர்க்க அடிப்படையில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த விமர்சனங்களில் தெறித்த சில பொறிகள் -

1. கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் ஆளுமை என்பதை விட, அவர் திமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரைப் புறஞ்சார்ந்த வகையில் மதிப்பீடு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

2, திமுக எந்த இலக்குக்காக இயங்கத் தொடங்கியதோ அந்த இலக்கை விட்டுத் தவறிச் செல்வதாகத்தான் திமுகவின் அரசியல் பயணம் இருந்திருக்கிறது, இலக்கு தவறிப் பயணம் செய்த அமைப்பின் தலைவராகத்தான் கலைஞர் இருந்திருக்கிறார்.

3. மாநில சுயாட்சிக்கென ராஜமன்னார் குழுவைக் கலைஞர் அமைத்தது உண்மைதான் என்றாலும், அந்தக் குழு கொடுத்திருந்த பரிந்துரைகளில் கலைஞர் காட்டிய முனைப்பு என்ன? காட்டாக, இந்தித் திணிப்பைப் பாதுகாக்கும் பிரிவு 17க்கு எதிராக 1965இல் பெரும் போராட்டம் நடத்திய திமுக, ஆட்சிக் கட்டில் ஏறியதும், தில்லியில் பல அமைச்சரவைகளில் பங்கேற்றும் 17ஆவது பிரிவை அடியோடு நீக்குவதற்குச் செய்த முயற்சிகள் என்ன? அதற்காகக் கலைஞரிடமோ, அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்களிடமோ இருக்கும் வழிகாட்டுப் பாதை என்ன?

4. பதவி என்பது மேல்துண்டு போல, கொள்கைக்காக அதைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிக் கொள்கை என எதை எடுத்துக் கொண்டாலும் மேல்துண்டுக்காக வேட்டியை இழந்த கதைதான் இதுவரை நடந்துள்ளது.

5. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த போது, ராஜ மன்னார்க் குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் திமுக பங்கேற்றதா? தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் திமுக கேட்டதா?

6. இந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதால்தான், திமுக சின்னஞ்சிறு சாதனைகளைக் கூட மிகவும் பெரிதாக்கிக் காட்டுகிறது.

7. நெருக்கடிநிலைக் காலத்தில் அண்ணா சாலையில் தனி மனிதராகக் கலைஞர் துண்டறிக்கை கொடுத்தது துணிச்சலான செயல்தான். ஆனால் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தை முதலில் பயன்படுத்தியது கலைஞர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

8. தடா சட்டம் நீங்கிய போது, அதற்கு மாற்றாத இந்தியாவுக்கே வழிகாட்டியாக பொடோ கொண்டு வந்ததும் கலைஞர்தான்.

9. கலைஞர் நினைத்திருந்தால் அடக்குமுறைக் கருவியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். காட்டாக, அவர் ஆட்சியில் ஏழாண்டுச் சிறைவாசம் முடித்தோர் விடுதலை செய்த போது, 17 ஆண்டு சிறையில் வாடும் இசுலாமியரையும் விடுதலை செய்யுங்கள் எனக் கலைஞருக்கு நான் கடிதம் எழுதியும், அவர் அதனைக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் அவர் தில்லியைக் கண்டு அஞ்சியது, தில்லி நம் மீது வருத்தப்படக் கூடாது என்பதே ஆகும்.

10. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கலைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை போர்ட் டிரஸ்டில் சுபோத் கான்ட் சகாய் என்ற இந்திய அமைச்சர்  தங்கியிருந்த போது, அவரைச் சந்தித்து, நாங்கள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கோம் பாருங்கள் எனப் பட்டியல் வாசித்தார் கலைஞர்.

11. நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த கட்சிதான் திமுக. அதற்குப் பிறகு சமாதானத் தூது அனுப்பியதும் திமுகதான். நெருக்கடி நிலையின் கடைசிப் பகுதியில் அரசமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரகமாக சஞ்சய் காந்தி செயல்பட்டு, அவர் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்த போது, கலைஞர் முரசொலியில் சஞ்சாய் காந்தியைப் புகழ்ந்தும், கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று சாடியும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

12. நெருக்கடி நிலையை எதிர்த்த கலைஞர்தான் 1980இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். எனவே கலைஞரின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுவது எல்லாமே, கூட்டல் கழித்தல், சந்தர்ப்பவாதம் என்பதற்கு மேல் வேறெதுவுமே கிடையாது. கலைஞரே இதனை மறுக்க மாட்டார்.

13. உங்களின் லட்சியப் பயணத்தைப் பதவி அரசியாலால் தொலைத்து விட்டீர்கள் என்றுதான் நான் கலைஞரைப் பார்த்துச் சொல்வேன்.

# நலங்கிள்ளி

வாசு சீனிவாசன்

நிழல் என்கின்ற இருட்டு,
முழு நிலவை விழுங்க முனைந்த
அதே நாளில், அதே வேளையில்,
சில சாதி, மத, இன
வெறி கொண்ட
ஈவு இரக்கமற்ற
படித்த மிருகங்கள்
இந்த சூரியனையும் 
விழுங்க பார்த்து தோற்றது.

இறுதி மூச்சு வரை
போராடிக்கொண்டிருக்கும்
அந்த போராளியின்
மரணத்தை எதிர் பார்க்கும்
பிணந்தின்னிக் கழுகுகளுக்கு
நான் சொல்வது இதுதான்.

மரணம் ஒரு நாள்
எல்லோருக்கும் உறுதி  .
இரண்டு வருடம் அரசியலில்
இல்லை, அவரால் யாருக்கு
என்ன தொல்லை...
ஆனாலும் அவரை பார்த்து
நடுங்கும் கோழைகளே...

உங்களை நீங்களே
உறுதிப்படுத்திக்கொண்ட
நாள் இன்று.....ஆம்
மனிதம் இல்லா மிருகமென்று...
#longlivekalaignar

மனோ சவுந்தர் மனோ

மறைப்பதற்கு ஒன்றுமில்லை!

அவரைத்தாண்டி "அவரை" யாராலும் பார்க்கவேமுடியாது. அவருக்கு, சிகிச்சையளித்த மருத்துவ நிபுணர்கள் விரட்டியடிக்கப்பட்டு அவரது குடும்ப டாக்டர் ஒருவர் மட்டுமே அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத்தொடங்கினார்.

அவருக்கான, நோய்கள் ராணுவ இரகசியம்போல் பாதுகாக்கப்பட்டன. அவர், அட்மிட் ஆன மருத்துமனையின் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டன. என்ன சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன என்று மறைத்தார்கள்.

யாருமே மருத்துவமனைக்குள் அவரது அறைக்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது, இரத்த சொந்தத்தையே அனுமதிக்கவில்லை. இப்படி, எல்லாமே இரகசியம் காக்கப்பட்டிருந்தால் என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேட்பதில் தவறில்லை.

ஆனால், எந்த இரகசியமும் மர்மங்களும் இல்லாமல் இருக்கும் கலைஞருக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேட்டுக்கொண்டிருந்தால் என்ன சொல்வது? ஏதாவது, நிகழ்ந்தால் அவர்களே சொல்லிவிடுவார்கள்.  மர்மமும் இல்லை...இரகசியமும் இல்லை. மறைப்பதற்கு ஒன்றுமில்லை!!!

கோவி லெனின்

எதிரி என நினைத்திருந்தோரும்
இல்லம் தேடி வருகிறார்..
வாஞ்சையோடு அரவணைக்கிறது
உன் உள்ளம்.

நீண்ட நாட்களாக
வாசலில் காத்திருக்கும் காலனை
அத்தனை சீக்கிரமாக
அரவணைத்துவிடாதே..

எத்தனை உடன்பிறப்புகள்
உன் உயிராகத் துடிக்கின்றார்
ஒரு முறை உற்று நோக்கு…
ஒற்றைச் சொல்லால்
அவர் துயரம் போக்கு..

கட்சித் தலைவராக பொன்விழா
சட்டமன்ற உறுப்பினராக வைரவிழா
பத்திரிகையாளராக பவளவிழா
உன் இலட்சியப் பயணம்
ஒருபோதும் தடுக்கி விழா (து)….

பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்
உன் சாதனை வரலாறு
நீ வாழ்கின்ற நாட்களெல்லாம்
எமக்கு பெரும்பேறு

திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆடி 11

Thursday, July 26, 2018

நலங்கிள்ளி

பிரியாணிச் சுவையில் கரைந்த பெண்ணுரிமை!

சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என் பல் ஊடுகதிர்ப் படம் எடுக்க பணம் கட்டுவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தேன். ஒரு பெண், அவருக்கு 25 வயதிருக்கும். மேட்டுக்குடியாக விரும்பும் எளிய பெண்கள் போன்றே நெற்றி நடு வகிட்டில் குங்குமம் வைத்திருந்தார். திருமணமானவர். ஒவ்வொருவரும் அவரவர்களின் பல் வலிக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணைப் ஒரு பாட்டி கேட்டார். என்னம்மா, கன்னம் இப்படி வீங்கிருக்கு என்றார். நேத்து என் வீட்டுககாரர் அடிச்சிட்டாரு, கீழ் வரிசைல ரெண்டு பல்லு ஒடைஞ்சிடுச்சி என்றார். ஏன் அடிச்சாரு எனக் கேட்டேன் நான். கொழம்பு அவருக்குப் புடிச்சா மாதிரி சரியா வைக்கலைன்னு கோவிச்சுகிட்டு அடிச்சிட்டாரு என்றார். எனக்கு உடனே பெண்ணியச் சீற்றம் . ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் கலாட்டா சிரிப்பு .   ஏம்மா கொழம்பு ருசியா வைக்கலைன்னா அடி வாங்கினன்னு கட்டணம் வசூலிப்பவர் பகடியாகச் சிரித்தார். இப்போது அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். பாவம் வருந்துவார் என நினைத்தேன். பார்த்தால் அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கிறார். என்னம்மா சிரிக்கற, இது சட்டப் படிக் குற்றம்னு தெரியுமான்னேன்? இதற்கெல்லாமா சட்டம் இருக்குன்னு கேலியாகச் சிரித்தாள். சார் நீங்க வேற, அவரு அடிச்சாருன்னா அன்னைக்கே ஒரு பிரியாணி கேட்டு அடம் பிடிச்சு வாங்கிடுவேன் என்றாள் குழந்தையைப் போல! ஏம்மா ? ஒரு பிரியாணிக்காகப் பெண்ணுரிமைய வித்துப்புட்டியே என்றேன். பெண்ணுரிமைன்னா என்ன சார் என்றாள். இப்போது நான் கப்சிப்.

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...